‘டிடெக்டிவ் நேசமணி’ மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா வடிவேலு? – தயாரிப்பாளர் விளக்கம்!!
நடிகர் வடிவேலு அடுத்ததாக ‘டிடெக்டிவ் நேசமணி’ என்கிற படத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது அவர் ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே வடிவேலு அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு ‘டிடெக்டிவ் நேசமணி’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அப்படத்தை ராம்பாலா இயக்க, சி.வி.குமார் தயாரிப்பதாகவும் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த போஸ்டரை ஏராளமானோர் பகிர்ந்தும் வந்தனர்.
இந்நிலையில், இந்த போஸ்டர் குறித்து அறிந்த தயாரிப்பாளர் சி.வி.குமார், இது உண்மை அல்ல போலியானது எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் அந்த போஸ்டரை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், போலி செய்தியா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா… ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா” என பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சி.வி.குமாரின் Twitter பதிவு