நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் வியாபார முன்னெடுக்கும் நிறுவனங்களில் பல வாகனங்கள் இருந்தால்….. புதிய நடைமுறை!!
நாடளாவிய ரீதியில் தற்போது QR குறியீட்டு முறை மூலம் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
முச்சக்கரவண்டிகள் காவல் நிலையங்களில் பதிவு செய்து அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,
அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் வியாபாரங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களில் பல வாகனங்கள் இருந்தால்
அந்த வாகனங்களுக்கு ஓகஸ்ட் 12 ஆம் திகதி முதல்
QR குறியீட்டில் எரிபொருளை பெற பதிவு செய்ய முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி தமது பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.