யாழ் கோட்டை பகுதியிலும்,பண்ணைப் பாலத்தின் கீழும் தொடர்ச்சியாக பாடசாலை சிறுமிகள் துஸ்பிரயோகம்….. யாழ். மாவட்ட செயலக கூட்டத்தில் குற்றசாட்டு!!
யாழ் நகரில் உள்ள கோட்டை பகுதியில் தொடர்ச்சியாக பல சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கபடுவதாக யாழ். மாவட்ட செயலக கூட்டத்தில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.
இது குறித்து மேலும் கூட்டத்தில் தெரிவிக்கையில்,
முனியப்பர் ஆலயத்திற்கு பின்பாகவும் கோட்டைக்கு வெளிப்புறத்திலும் உள்ள பகுதிகளிலும் பல பாடசாலை சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
காதலர்கள் என்ற போர்வையில் அங்கு அழைத்து வரப்படும் சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர்.
அதேவேளை,
பண்ணைப் பாலத்தின் கீழ் பகுதியிலும் இது போன்று சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கபடுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக அங்கு இந்த சிறுமிகள் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும்,
பெற்றோர் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் உன்னிப்பாக கவனிக்க வேண்டுமெனவும்
இந்த பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனவும் யாழ். மாவட்ட செயலக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.