தொடர்ந்து சந்தானத்தை சுற்றி வரும் சர்ச்சைகள்!!

தமிழ் சினமாவிற்குள் காமெடி நடிகராக வந்து தற்போது காதநாயகான நடித்து வருபவர்தான் நடிகர் சந்தானம். இவருடைய நகைச்சுவைக் காட்சிகளில் உருவக்கேலியும் பெண்களை தவறாக சித்தரிப்பதும் அதிகளவில் இருந்ததாக குற்றச்சாட்டுக்களும் தொடர்ந்து எழுந்து வந்தன.

இதேவேளை, இவர் காமெடி நடிகராக நடித்த என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து, பாலியல் தொழில்ரீதியாக கிண்டலடித்து சந்தானம் பேசிய வசனத்துக்கு பெண்கள் அமைப்பில் இருந்தும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் படத்தில் அந்த வசனம் பின்னர் மாற்றி அமைக்கப்பட்டது.

மேலும்,

பிரம்மாண்ட இயங்குனர் ஷங்கரின் ஐ படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தை இழிவுபடுத்திய சந்தானம் மற்றும் படக்குழுவுக்கு திருநங்கைகள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

மேலும்,

#அழகுராஜா திரைப்படத்தில் புகையிலை விழிப்புணர்வு விளம்பரத்தை கேலி பேசியதாக எதிர்ப்புகள் வர பின்னர் அந்த காட்சியும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதன்பின்னர் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ஏ1 திரைப்படத்தில் பிராமணர்களை அவர் இழிவுபடுத்தியதாக பிராமணர்கள் சங்கம் பொலிஸ் நிலையத்தில் அவர் மீது முறைப்பாடு அளித்தது. இதன் உச்சமாக ஓடிடியில் வெளிவந்த டிக்கிலோனா திரைப்படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரம் ஒருவரை சைடு ஸ்டேண்ட் என சந்தானம் அழைக்கும் காட்சி பெரும்எதிர்ப்புகளை சந்தித்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இயக்கமான `டிசம்பர் 3′-ன் தலைவர் பேராசிரியர் தீபக் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

இதே வரிசையில் தற்போது சந்தானம் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சபாபதி படமும் இணைந்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெய் பீம் படம் சர்ச்சை தொடர்பாக பேசிய சந்தானம் “யாரையும் உயர்த்தி பேசலாம், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசக் கூடாது” என சொன்னது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்ததாக இப்படத்தின் போஸ்டர் சர்ச்சையிலும் சந்தானம் சிக்கியுள்ளார்.

இந்த படத்தின் முதல் போஸ்டரில் தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்’ என எழுதப்பட்ட சுவரின் மீது நடிகர் சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று இடம்பெற்றிருப்பதால் இது போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதோடு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் இந்தப் போஸ்டரை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *