கொரோனா கட்டுபாடுகள் நீக்கம் தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு!!
நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் சில நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று இன்று வெளியிடப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, 5 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் கடந்த 4ஆம் திகதி சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.