கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் இலகுவழி -பிரித்தானியாவில் சாதித்த இலங்கை பெண்
கொரோனா தொற்றை இலகுவாக கண்டுபிடிக்கும் எளிய வகையிலான பரிசோதனை முறையொன்றை இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் தலைமையிலான குழுவொன்று பிரித்தானியாவில் கண்டுபிடித்துள்ளது.
இதன்படி இரத்த பரிசோதனையின் ஊடாக கொவிட் தொற்றாளர்களை அடையாளம் கண்டுகொள்ளும் புதிய நடைமுறையொன்றை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் இலங்கையரான கலாநிதி நிலிகா மலவிகே தலைமையிலான குழுவே கண்டுபிடித்துள்ளது.
விரலிலிருந்து எடுக்கப்படும் ஒரு துளி இரத்தத்தின் ஊடாக கொரோனா வைரஸை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
இந்த நடைமுறையானது, மிக விரைவாகவும், இலகுவாகவும் செய்யக்கூடிய ஒன்று என கூறப்படுகின்றது.
இந்த ஆய்வு நடவடிக்கைகளில் இலங்கை, தாய்வான், இந்தியா, தாய்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிபுணர்கள் ஈடுபட்டதாகவும் ஆரம்பகட்ட பரிசோதனைகள் வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.