88 மாதிரிகளில், 82 ஒமைக்ரோன் மற்றும் 6 டெல்டா தொற்றாளர்கள் இனங்காப்பு….. அபாய வலையமாகும் இலங்கை!!
நாட்டில் 82 புதிய ஒமைக்ரோன் தொற்றாளர்ளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர(Chandima Jeewandara) தெரிவித்துள்ளார்.
88 மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் 82 ஒமைக்ரோன் தொற்றாளர்களும் 6 டெல்டா வைரஸ் தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபை, கொழும்பு, கொஸ்பேவ, மத்துகம, ஆகிய பகுதிகளில் ஒமைக்ரோன் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காப்பட்டுள்ளதாக சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை,
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருவதாக, வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த நோயாளர்களுள் அதிகமானோர், கொரோனா நோயுடன் வேறு நோய் நிலைமைகளையும் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கொரோனா தொற்றுறுதியாகி குணமடைந்த நபர் ஒருவருக்கு, மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.