கொரோனாவின் அடுத்த அவதாரம்(A30)….. இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இலங்கையும் – ஹேமந்த ஹேரத்!!
உலகில் பல நாடுகள் A 30 கொரோனா வைரஸ் திரிபு குறித்து கடும் அவதானத்துடன் இருந்து வருவதுடன் இலங்கையும் இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
இந்த திரிபை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் என்ற வகையில் சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கொரோனா வைரஸின் A 30 திரிபு சம்பந்தமாக இலங்கையும் அவதானத்துடன் இருந்து வருவதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana)தெரிவித்தார்.
அஸ்ராசெனேகா (Astrazeneca) உட்பட பிரதான கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் அனைத்து பாதுகாப்புகளையும் இந்த புதிய வைரஸ் திரிபால் உடைக்க முடியும் என புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.