மீண்டும் கொரோனா அலை….. உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதிர்ச்சி தகவல்!!
கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முற்றாக நீங்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற 76 ஆவது உலக சுகாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன்,
தற்போதைக்கு பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால் கொரோனா வைரஸ் அவசரநிலையில் இருந்து மட்டுமே, நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,
இந்த தொற்று வரும் காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திரிபுகளாக உருமாறும் எனவும் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால்,
மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்படக் கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில்,
சீனாவில் XXB வேரியண்ட் எனும் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.