விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம்!!
அண்மையில் இடம்பெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் குழுக்களுக்கு ஒரு விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்,
நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை கருத்திற்கொண்டு மத்திய நிலைய பணிக்குழாம் மற்றும் விடைத்தாள் பரிசோதகர்களுக்காக செலுத்தப்படும் நாளாந்த கொடுப்பனவிலும் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கல்விசார் தொழிற்சங்கங்களுக்கு இடையே அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பிலான கோரிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன.
இந்நிலையில்,
அது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சரால் தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.