கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகள்….. அதிரடி கைதுகள்!!
கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகள் வைத்திருந்த இருவரை எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் கைது செய்துள்ளது.
போலியாக தயாரிக்கப்பட்ட கனடிய நிரந்தர வதிவிட அட்டைகளுடன் குறித்த நபர்களிடம் சமூக காப்புறுதி அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் துறைமுக நுழைவாயிலில் இந்த இருவரையும் எல்லை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து பல்வேறு போலி ஆவணங்களும் 10000 டொலர்கள் பணமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் நிதிச் சலவையில் ஈடுபட்டனரா அல்லது பயங்கரவாத நிதியீட்டுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.