நாட்டில் 60 சதவீதமானோருக்கு முதல் Dose, 40 சதவீதமானோருக்கு இரண்டாவது Dose Covid-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!!
இலங்கையில் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது தடுப்பூசி 40 சதவீதமானோருக்கு ஏற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு மாநகரசபை எல்லைப்பகுதிக்குள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்த 6ஆம் திகதி ஆரம்பமானது. இதற்கமைவாக ,கொழும்பு சுகததாச உள்ளக அரங்கு, ஜிந்துப்பிட்டி பொதுச் சுகாதார அலுவலகம், போர்ப்ஸ் வீதி சனசமூக நிலையம், கெம்பல் பார்க், சாலிகா மைதானம், ரொக்ஸி கார்டின் ஆகிய இடங்களில் இன்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்படுகிறது.