கிரிக்கெட் உலகிற்கு பேரிழப்பு -திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மறைந்தார் பிரபல வீரர்
அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ்(59) மும்பை தனியார் ஹோட்டலில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் டீன் ஜோன்ஸ் நேர்முக வர்ணனையாளராகவும் கிரிக்கெட் விமர்சகராகவும் இருந்து வந்தார்.
ஐபிஎல் போட்டிகள் கடந்த 19-ம் திகதி தொடங்கிய நிலையில், இதற்கான பணிகளுக்காக அவர் மும்பையில் இருந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்ததையடுத்து அவுஸ்ரேலியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான டீன் ஜோன்ஸின் மறைவு அவர்ர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.