நாட்டை வந்தடைந்தது கச்சா எண்ணெய் கப்பல்….. மீண்டும் செயல்படத் தொடங்கும் சபுகஸ்கந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!!
கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று இன்று(13/08/2022) இலங்கையை வந்தடையும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…..
இன்று(13/08/2022) இரவு 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சரக்குக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்த மாதிரிகளை,
நாளை(14/08/2022) பரிசோதிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
120,000 மெட்ரிக் தொன் கொண்ட இரண்டாவது கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்
ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிக்கிடையில் நாட்டை வந்தைடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,
சபுகஸ்கந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அடுத்த வார நடுப்பகுதியில் செயல்படத் தொடங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.