சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் “இன்புளுவென்ஸா” மற்றும் “கொரோனா”….. மிக்க கவனமாக இருக்க வேண்டுகோள்!!
இலங்கையில் தற்போதைய காலத்தில் டெங்கு இன்புளுவென்ஸா மற்றும் கொரோனா முதலான தொற்று நோய்கள் சிறுவர்களுடையே வேகமாக பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தற்சமயம் இலங்கையில் கொரோனாத் தொற்று சமூகத்தில் உள்ளது.
அதனை வைத்திய பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால் சில நேரம் இன்புளுவென்சா அல்லது கொரோனாத் தொற்றாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் 664000 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியோரில் 16528 பேர் மரணமடைந்துள்ளனர்.
அண்மையில்,
60 வயதாகிய பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்,
கொரோனா அச்சம் முழுமையாக நீங்கவில்லை என்றும்
இதன் காரணமாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளில் அவதானமாக இருக்க வேண்டும் என அரசாங்கத்திடம் மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.