தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ‘தம்மிக்க பெரேரா’ பரிந்துரைப்பு!!
தம்மிக்க பெரேராவின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியமையை தொடர்ந்து
ஏற்பட்ட வெற்றிடத்துக்காக தம்மிக்க பெரேரா தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார்.
நாட்டில் வர்த்தக வலையமைப்பு ஒன்றின் தலைவராக செயற்படும் தம்மிக்க பெரேரா, அப்பதவியில் இருந்து விலக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் பின்னர் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.