குரங்கம்மை தொற்று தொடர்பில்….. உலக பொதுச் சுகாதார அவசர நிலைமை அறிவிப்பு!!
கனடாவில் குரங்கம்மை நோய்த் தொற்று தொடர்பில் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி வைத்தியர் திரேசா டேம் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அங்கு இதுவரையில்,
745 பேர் குரங்கம்மை நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட எச்சரிக்கை செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த வைரஸ் தொற்று தொடர்பிலான புரிதல் இன்னமும் முழுமை பெறவில்லை.
இதனால்,
நோய்த் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவோர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டியது இன்றியமையாத்து.
குரங்கம்மை நோய் உலக பொதுச் சுகாதார அவசர நிலைமையாக கருதப்பட வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் கூட அண்மையில் அறிவித்துள்ளது.
குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்கள் குரங்கம்மை நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
உலக அளவில் 78 நாடுகளில் 18000 பேருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.