தனுஷ் நடிப்பில் திரையுலகை கலக்கிய Captain Miller திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைக்கவுள்ள பெரும் அங்கீகாரம்!!
தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கேப்டன் மில்லர்.
வரலாற்றுப் பின்னணியில்,
ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இந்த படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் 10வது லண்டன் தேசிய விருதுக்கான ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.