டொலர்களோ ரூபாய்களோ நாட்டில் இல்லை ‘ஹர்ஷ டி சில்வா’ அதிர்ச்சி தகவல்!!
தற்போது நாட்டில் டொலர்களோ ரூபாய்களோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை,
எதிர்காலத்தில் நாட்டைக் ஆட்சி செய்யும் எந்தவொரு குழுவிற்கும் இது மிகவும் கடினமான இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்ட அவர்,
ஹர்ஷ டி சில்வா அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்கவும்
“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து ஒரு யோசனை பெறுவதற்காக இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகவும் பாரதூரமானதாக உணரப்படுகின்றது.
தற்போது நாட்டில் டாலர்களோ ரூபாய்களோ இல்லை,
எதிர்காலத்தில் நாட்டைக் கைப்பற்றும் எந்தவொரு குழுவிற்கும் இது மிகவும் கடினமாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.