டொலர்களில் கட்டணம் செலுத்தாவிடின் விமானங்களுக்கு எரிபொருள் இல்லை!!
டொலர்களில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் விமானங்களுக்கு எரிப்பொருள் வழங்கப்படாது என எரிசக்தி அமைச்சு, சிறிலங்கன் விமான சேவைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த வாரம் அமைச்சு தனது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அதன் அரச வங்கி வலையமைப்பின் ஊடாக டொலர்களை செலுத்துமாறு தேசிய விமான சேவை நிறுவனத்திற்கு அறிவுறுத்தியதாகவும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் கே.டி.ஆர் ஒல்கா (KTR Olga) தெரிவித்துள்ளார்.