ஏத்தர் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் விநியோக விவரம்
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஏத்தர் எனர்ஜின் நிறுவனம் தனது 450எக்ஸ் மற்றும் 450எக்ஸ் சீரிஸ் 1 கலெக்டர்ஸ் எடிஷன் மாடல் விநியோகத்தை துவங்கி உள்ளது. இரு மாடல்களும் முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
விரைவில் மும்பை, ஆமதாபாத், ஐதராபாத் போன்ற நகரங்களில் விரைவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. நாட்டின் மற்ற நகரங்களில் அதன்பின் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் சீரிஸ் 1 ஸ்பெஷல் கலெக்டர்ஸ் எடிஷன் மாடல் விரைவில் கொச்சி, கோழிக்கோடு, டெல்லி மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் விற்பனைக்கு வருகிறது. ஏத்தர் 450எக்ஸ் மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஏத்தர் எனர்ஜி வாகனங்கள் உற்பத்தி பணிகள் விரைவில் ஓசூரில் உள்ள ஆலையில் துவங்க இருக்கிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லடசம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.