எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டம்….. ரணிலின் அதிரடி திடடம்!!
பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இன்று (16/07/2022) காலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
நிவாரணம் வழங்குவதற்காக ஓகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மேலதிக நிதியை பயன்படுத்தவும் குறித்த கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் உடனடியாகவும் வழங்குவதற்கும் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில்,
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு பதில் அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும்,
இக்கலந்துரையாடலின் போது வர்த்தகர்கள் தமது தொழிலை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு தேவையான சூழலை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக பதில் அதிபர் மேலும் தெரிவித்தார்.