எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்….. சினோபெக்கின் விலைகள் வெளியீடு!!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனம் (சினோபெக்) நிறுவனமும் தமது திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (01) முதல் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகள் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லீட்டருக்கு சினோபெக்கினால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளாவன,

  • 92 ரக பெட்ரோல்  – 363 ரூபாய்
  • ஓட்டோ டீசல்         –  355 ரூபாய்
  • 95 ரக பெட்ரோல்  –  464 ரூபாய்
  • சூப்பர் டீசல்           –  475 ரூபாய்

சினோபெக்கின் பெட்ரோல் 92 மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் திருத்தப்பட்ட விலைகள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா இந்தியன் ஓயில் கம்பனி (LIOC) வழங்கும் விலைகளை விட சற்று குறைவாகவே உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று அதிகாலை 5 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இன்று முதல் (01) பெறுமதி சேர் வரியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது நடைமுறைக்கு வருவதை ஒட்டியே எரிபொருள் விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பின் பின்னணியில் முச்சக்கர வண்டிக் கட்டணம், பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *