2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திகைப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்தார். தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் தகவல் தொடர்பு சிரமங்களுக்கு மத்தியில், திணைக்களத்திற்கு அதிக அளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.
ஒத்திவைப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுடுத்துவதற்காக இந்த மறு அறிவிப்பு உதவுகிறது. நிலைமை சீரானவுடன் புதிய திகதிகள் அறிவிக்கப்படும்.
