வீட்டு கிணறு ஒன்றினுள் இருந்து பெட்ரோல் ஊற்று….. குறித்த பகுதியில் விசேட ஆய்வில் நிபுணர் குழு!!
வீடொன்றிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து பெட்ரோல் ஊற்றெடுப்பது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறுமூடு ஆலந்தற பகுதியில் உள்ள சுகுமாரன் என்பவரின் வீட்டில் உள்ள கிணற்றில் இருந்தே
தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றெடுத்து வருகிறது.
இவரின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தொலைவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுள்ளது.
அங்குள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கிலிருந்து கசிந்து இந்த கிணற்றில் ஊற்றெடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
முறைப்பாட்டை அடுத்து வீட்டிற்கு வந்த எரிபொருள் நிலைய நிர்வாகத்தினர் கிணற்றை மூடியுள்ளனர்.
அத்துடன்,
கிணற்றில் பெட்ரோல் ஊற்றெடுப்பது தொடர்பில் நிபுணர் குழுவும் ஆய்வு மேற்கொண்டுள்ளது.