கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை….. வெகுவிரைவில் மறுபடியும் தொடருந்து சேவை!!
கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் தொடருந்து சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு தொடருந்து சேவை கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
அதேவேளை,
காங்கேசன்துறையில் இருந்து வவுனியா வரையிலான தொடருந்து சேவைகளும் இடம்பெற்றுவந்தன.
திருத்த பணிகளுக்காக அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையிலான தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் வீதியின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி,
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை மீண்டும் புகையிரத சேவையை ஆரம்பிக்க முடியும் என மஹவ – ஓமந்தை புகையிரத திட்ட பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்தார்.