Fact Check: கொரோனா தடுப்பூசி போட்டால் 2 ஆண்டில் இறந்துவிடுவார்களா? தீயாய் பரவும் தகவல்!!!!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை தடுக்க மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி

போட்டுக்கொள்ளவேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதனிடையே, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் “கோவிட் தொற்றுக்கு எதிர்க்க தடுப்பூசி பெற்றவர்கள் இரண்டாண்டுகளுக்கு மேல் உயிர்வாழ வாய்ப்பில்லை” என்று கூறியதாக ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் உலகம் முழுவதும் வைரலாகி தீயாய் பரவி வருகிறது.

மேலும், அந்த பக்கம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், 2008ம் ஆண்டில் மனித நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வைரஸ் (எச்.ஐ.வி) கண்டுபிடிப்பதில் அவர் செய்த பங்களிப்புக்காக பிரெஞ்சு வைராலஜிஸ்ட் லூக் மாண்டாக்னியர் நோபல் விருது பெற்றார்.

மேலும், COVID-19 இயற்கையாக உருவானதல்ல ஒரு சீன ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கடந்த ஆண்டு முதல் கூறி வருகிறார் மாண்டாக்னியர். இவர் தடுப்பூசிக்கு எதிராகவும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இதையடுத்து, இவர் கூறியதாக வாட்ஸ் அப் மெசேஜ்ஜில், தடுப்பூசி போடப்பட்ட அனைவரும் 2 ஆண்டுகளுக்குள் இறந்து விடுவார்கள். நோபல் பரிசு வென்ற விஞ்ஞானியான வைராலஜிஸ்ட் லூக் மாண்டாக்னியர் தொற்றுக்கு எதிராக எந்தவொரு தடுப்பூசியையும் போட்டு கொண்டவர்கள் உயிர்வாழ வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களை காப்பாற்ற எந்த சிகிச்சையும் இல்லை. பின்னர், உடல்களை எரிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். விஞ்ஞான மேதை தடுப்பூசியின் கூறுகளைப் படித்தபின் பிற புகழ்பெற்ற வைராலஜிஸ்டுகளின் கூற்றுக்களை ஆதரித்தார். அவர்கள் அனைவரும் ஆன்டிபாடி சார்ந்த விரிவாக்கத்தால் இறந்துவிடுவார்கள்.

இதைவிட வேறு எதுவும் சொல்ல முடியாது” என்று மக்களை அச்சுறுத்தும் வகையில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலுக்கு, பதிலளித்த பத்திரிகை தகவல் பணியகம் (PIB – Press Information Bureau) அந்த வாட்ஸ்அப் ஃபார்வர்ட் மெசேஜ் உண்மையில் போலி செய்தி என்று கூறி உள்ளது. இந்த செய்தியை யாருக்கும் ஃபார்வர்ட் செய்ய வேண்டாம் என்றும் PIB அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *