குடும்பஸ்தர் ஒருவர் முல்லைத்தீவில் அடித்துக் கொலை!!
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில்-செம்மலை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே அளம்பில் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து அடித்துக்கொலை செய்துள்ளார்.
வீட்டில் தந்தையுடன் வசித்து வந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்ற இருவர் குறித்த நபரை வெளியில் அழைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
இதன் போது தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.