2026 டி20 உலகக் கோப்பைக்காக அனிருத் இசையமைத்த பாடலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது
” பீல் த த்ரில்” எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது இந்தப்பாடலை
இந்தப்பாடலை இஸ்பாடிபை ,ஆப்பிள்மியூசிக் , அமேசான்மியூசிக்,ஜியோஷாவன்,யூடூப்,
இன்ஸ்டாகிராம் ,முகநூல் மற்றும் வேறு தளங்களிலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆடவருக்கான டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் பிப்.7ஆம் தேதி முதல் இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுத்ததால், அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது.இந்தியாவில் சென்னை, மும்பை, தில்லி உள்பட மொத்தம் 5 இடங்களில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இலங்கையில் மூன்று திடல்களில் இந்தப் போட்டிகள் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது கடைசி டி20யில் நியூசிலாந்தை இன்று எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பைக்கு முன்பாக வெற்றியுடன் இந்தப் போட்டியை முடிக்க வேண்டுமென வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் இருக்கிறார்கள்.
