500 ரூபாவால், 50 கிலோகிராம் சீமெந்தின் விலை அதிகரிப்பு!!
சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன, இந்த விலை உயர்வுக்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதிகளின் விலையை அதிகரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,
50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.