நிதி அமைச்சர் அலி சப்ரி – சிறிலங்காவுக்கான சீன தூதுவர் இடையில் கலந்துரையாடல்
சிறிலங்கா நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும், சிறிலங்காவுக்கான சீன தூதுவருக்கும் இடையில் மிக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும், சிறிலங்காவுக்கான சீன தூதுவருக்கும் இடையில் நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து சிறிலங்காவுக்கான சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது,
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் நிதி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
கடினமான அனைத்து சந்தர்ப்பத்திலும் சீனா, உதவி வழங்கும் என சிறிலங்காவுக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
சீனா, சிறிலங்காவிற்கு 2.5 பில்லியன் டொலர்கள் வழங்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் பாலித கோஹன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.