கிளிநொச்சியில் ஐந்து மாத கர்ப்பிணி பெண் மீது துப்பாக்கி சூடு!!
குடும்பத்தகராறு ஐந்து மாத கர்ப்பிணியான மனைவி மீது கணவன் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மனைவி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.
அக்கராஜன் குளம் காவல்துறை பிரிவுக்குற்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று(12/04/2023) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவப் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கராஜன் குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.