முல்லைதீவில் சற்றுமுன் பதிவானது முதலாவது வெடிப்பு சம்பவம்!!
முல்லைத்தீவு மாவட்டத்திலும் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் சமையல் செய்துகொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அருகில் யாரும் இல்லாததனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகிய முதலாவது வெடிப்பு சம்பவம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் முல்லைத்தீவு மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.