ஐம்பது லட்சம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்தி திட்டம்! அரசாங்கம் அறிவிப்பு!!
ஐம்பது லட்சம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்குள் இந்த தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் கட்டமாக மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் கிடைக்கப் பெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழு கடந்த மாதம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எதிர்வரும் இரண்டு மாதங்களில் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற உள்ளதாக அமைச்சர் ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 6ம் திகதி ஒரு மில்லியன சினோபார்ம் தடுப்பூசிகளும், எதிர்வரும் 9ம் திகதி ஒரு மல்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் கிடைக்கப் பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.