உயிர்காப்புப் பணிகளுக்கு உதவி பெறுவதற்காகக் காவல்துறையினர் தொலைபேசி இலகக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது நாடுடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமை காரணமாக உயிர்காப்புப் பணிகளுக்கும் மற்றும் எந்தவொரு அனர்த்த நிலைமையிலும் ஈடுபடுத்தப்படடுவதற்காகப் படகுகளுடன் கூடிய காவல்துறை கடற்படைப் பிரிவின் அதிகாரிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இந்தக் கடற்படைப் பிரிவின் உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பின்வரும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு உதவியைப் பெற்றுக்கெகாள்ள முடியும்.
பணிப்பாளர்/காவல்துறை கடற்படைப் பிரிவு –
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கபில பிரேமதாச : 071 8591868
அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தேசிய அவசர தொலைபேசி எண்கள்
அவசர அனர்த்த மேலாண்மை மையம் : 117 (அவசர அனர்த்த தகவல் வழங்கல் மற்றும் நிவாரண சேவைகளின் ஒருங்கிணைப்பு)
காவல்துறையினர் அவசர அழைப்பு : 119 (உயிர் பாதுககாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள்)
ஆம்புலன்ஸ் சேவை : 1990 (நோயாளிகள் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக)
தீயணைப்புப் படை : 110 (தீ விபத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்க)
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (Nடீசுழு) : 011 258 8946 (நிலச்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கை)
வானிலை ஆய்வுத்துறை : 011 268 6686 (வானிலை முன்னறிவிப்புகக்களை அறிய)
கடற்படை தலைமையகம் : 011 244 5368 (வெள்ள அனர்த்த நேரங்களில் படகு சேவைகள் மற்றும் மீட்பு நடடவடிக்கைகள்)
இராணுவத் தலைமையகம் : 113 (அவசர அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்)
விமானப்படைத் தலைமையகம் : 116 (ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளுக்காக)
