எமது பசங்க FM வானொலியின் அனுசரணையில் வறுமைக்கோட்டிற்குற்பட்ட குடும்பங்களிற்கான….. மலசலகூடங்கள் அமைத்து, கையாகிக்கும் நிகழ்வு நடைபெற்றது!!
பசங்க FM வானொலியின் ஒழுங்கமைப்பில் தமிழ் பொறியியலாளர் சங்கத்தின் நிதிப்பங்களிப்பில்
J/363 கிரமசேவகர் பிரிவு கரவெட்டி மேற்கு பிரதேசத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட
மலசலகூட வசதியில்லாத மூன்று குடும்பத்தினருக்கு எமது பசங்க FM வானொலியினால் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டு நேற்றைய தினம்(01/10/2022) அவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பசங்க FM வானொலியின் இயக்குனர் நா. தருஜன் கருத்து தெரிவிக்கையில்,
இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு நிதியினை தந்து உதவிய தமிழ் பொறியியலாளர் சங்கத்தினருக்கு Tamil Engineers Foundation எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்வதோடு,
இந்த திட்டத்தை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய கிராம சேவையாளர் திருK.ரதீசன் (Ratheesh Kanesh) அவர்களுக்கும்,
திருமதி ஷாலினி அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு இந்த திட்டத்திற்காக பணியாற்றிய எமது பசங்க FM வானொலியினருக்கும், கட்டுமானப்பணிகளை மேற்கொண்டவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று கூறியுள்ளார்.