உயர்தர பரீட்சையின் செய்முறை பரீட்சைகளில் தோற்றாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் நாடகம் மற்றும் அரங்கியல் பாடங்களுக்குரிய செய்முறை பரீட்சைகளில் தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
நேற்று (06/04/0222) செய்முறை பரீட்சைகள் இடம்பெற்ற நிலையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் செய்முறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.