வெளிநாட்டு மணமகன், மணமகளுக்கு காத்திருப்பவர்களுக்கு 2022 இலிருந்து புதிய விதிமுறைகளாக இலங்கை அரசு வைக்க்வுள்ள ஆப்பு!!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெற வேண்டும் எனும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2022 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கை பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் உரிய விசா அனுமதிப் பத்திரம், சிவில் நிலைமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பன மாத்திரமே அவசியமாக காணப்பட்டது.

இருப்பினும்,

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், வெளிநாட்டு பிரஜையை இலங்கை பிரஜை ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் போது, இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

புதிய சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள மேலதிக விபரங்கள்

⭕ இலங்கையர் திருணம் செய்யும் வௌிநாட்டவர், இறுதி 06 மாதங்களுக்குள் எவ்வித குற்றவியல் குற்றச்சாட்டையும் எதிர்நோக்கவில்லை என்பது அந்தச் சான்றிதழில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

⭕ அதனைத் தொடர்ந்து இலங்கைப் பிரஜை அல்லது அவர் சார்பான ஒருவரால் மாத்திரம், அந்தச் சான்றிதழ் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

⭕ பின்னர் அந்தச் சான்றிதழ் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவூடாக பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்படும்.

⭕ பாதுகாப்பு அமைச்சு வழங்கும் அறிக்கைக்கு அமைய பதிவாளர் நாயகத்தினால் திருமணத்திற்கான அனுமதி, மேலதிக மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனையடுத்து, திருமணப் பதிவிற்கான அனுமதி கிடைப்பதுடன் இந்தச் சட்டத்திற்கு அமைய மேலதிக மாவட்டப் பதிவாளர் நாயகத்திற்கு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

01. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, அதன் பிரதி மற்றும் செல்லுபடியாகும் வீசா

02. வௌிநாட்டவரின் சிவில் நிலைமையை உறுதிப்படுத்தும் அந்நாட்டு சான்றிதழ்

03. பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம்

04. வௌிநாட்டவரால் தயாரிக்கப்பட்ட தமது சுகாதார நிலைமை தொடர்பான அறிக்கை

05. பிறப்புச் சான்றிதழ் மற்றும் அதன் பிரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *