இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்கள்….. ஆரம்பமாகின சேவைகள்!!
இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவுடன் சினோபெக் எனர்ஜி லங்கா(Sinopec) தனது விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனம் கொழும்பு – மத்தேகொட பகுதியில் உள்ள அதன் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(30/08/2023) தனது உத்தியோகபூர்வ எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.
அதன்படி,
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லீற்றருக்கு தலா 03 ரூபா விலைக் கழிவுடன் தமது விநியோகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்காக சீனாவின் சினோபெக்(Sinopec),
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம்(United Petrole
um) மற்றும்
அமெரிக்காவின் ஆர்.எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
மே மாதத்தின் பிற்பகுதியில், இலங்கை அரச பிரதிநிதிகள் மற்றும் சினோபெக்(Sinopec) பிரதிநிதிகளுக்கு இடையில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.