மீண்டும் நாடு திரும்பவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!!
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
90 நாள் தாய்லாந்து விசா முடிந்தும் நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கோட்டாபயவின் சார்பில் இலங்கை அரசாங்கம் தாய்லாந்திடம் இந்த விசா கோரிக்கையை முன்வைத்ததாக தாய்லாந்து அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில்,
அவர் நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து அவருக்கான பல செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்சவும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபயவையும், மனைவியையும் ஏற்றிச் செல்ல இலங்கை விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
சிங்கப்பூரிலிருந்து மத்திய கிழக்கில் தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும்
அதற்கு சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால்
கோட்டபாய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.