மகிந்த உட்பட 13 பேருக்கு பயணத்தடை விதித்தது கோட்டை நீதவான் நீதிமன்று!!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல்வாதிகள் மற்றும் விசுவாசிகளான பதின்மூன்று (13) பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி.ரத்நாயக்க, சனத் நிஷாந்த மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன உள்ளிட்டோருக்கு இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னa
கோனுக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை கொழும்பில் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை BAR சங்கம் (BASL) ஆதரவுடன் சட்டமா அதிபர் சார்பில் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் விளைவாக கோட்டை நீதவான் இந்த பயணத்தடையை பிறப்பித்துள்ளார்.
இலங்கை முழுவதும் பரவலான அமைதியின்மையை ஏற்படுத்தி அலரிமாளிகைக்கு அருகாமையிலும்
கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது SLPP விசுவாசிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலேயே இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.