புத்தளம் வைத்தியசாலையில்….. ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகள்!!
புத்தளம் வைத்தியசாலையின் முதல் முறையாக கர்ப்பிணி தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார்.
24 வயதான இளம் தாய் இந்த குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சுமித் அன்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்,
ஒரு ஆண் குழந்தை மற்றும் மூன்று பெண் குழந்தைகளையும் தாய் பெற்றெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை,
பிறந்துள்ள இந்த குழந்தைகள் தற்போது புத்தளம் வைத்தியசாலையின் சிறார் நோய்கள் தொடர்பான சிறப்பு மருத்துவர் சூரின் ஜெயவர்தனவின் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.