விஜய்யின் அடுத்த படத்தில் 4 கதாநாயகிகள்!!
தலைவி படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் 4 கதாநாயகிகளை வைத்து சத்தமே இல்லாமல் ஒரு படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விஜய் இயக்கி முடித்துள்ள ’தலைவி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த திரைப்படம் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் விஜய் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டது என்றும், இந்த படத்தில் நான்கு முக்கிய நடிகைகள் நடித்து இருக்கிறார்கள்.
நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்பதால் ’தலைவி’ ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.