நான்கு வாரங்களுக்கு முடக்கப்படுமா இலங்கை??
அதிவேகமாக பரவிவரும் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தல் மற்றும் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகியன, சுகாதார கட்டமைப்பினால் சமாளிக்க முடியாது என சுகாதார தரப்பு கூறியுள்ளது.
அதனால், நாட்டை 4 வாரங்களுக்கு முடக்குவது அத்தியாவசியமானது என அரசாங்கத்திடம் சுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளது.
நாளாந்தம் 3000தை அண்மித்த தொற்றாளர்களும், நாளாந்தம் 100ஐ அண்மித்த உயிரிழப்புக்களும் பதிவாகி வருவதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 13 நாட்களில் மாத்திரம் 1000 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. மேலும், நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரியுள்ளனர்.