பாரிஸ் இற்கு இனி நேரடி விமான சேவையை முன்னெடுக்கவுள்ள Sri lankan Airlines!!

சிறிலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிறிலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 297 இருக்கைகளுடன் கூடிய ஏயார் பஸ் ஏ330-300 என்ற விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அனைத்து புதன் , வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரான்ஸுக்கான விமான ​சேவை இடம்பெறும் என சிறிலங்கன் விமான சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *