பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு ஆறு வருடங்களின் பின்னர் நேரடி விமான சேவை!!
இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளது.
அதன்படி,
சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 563 என்ற விமானமே இன்று அதிகாலை 1மணிக்கு பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த விமானமானது பிரான்ஸின் பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளதானவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு
புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து Paris Charles De Gaulle விமான நிலையத்திற்கு செல்லும்.
அத்துடன் அதே நாளில் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு மற்றொரு சிறிலங்கன் விமானம் வரவுள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
1980களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 இல், இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.