விலையேற்றத்துடன் தளர்த்தப்பட்டன எரிபொருள் விநியோகத்திற்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும்!!
எரிபொருளை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானம் எடுத்துள்ளது.
இதன்படி,
வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் இதனை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும்,
டீசல், பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதோடு,
எரிவாயு இன்மையால் மக்கள் தொடர்ந்தும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,
நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பான தொடர்புடமை செய்தியை பார்வையிட இங்கே சொடக்குக…..