எரிபொருள் விலையில் திருத்தம் – திடீரென வெறிச்சோடியுள்ள நிரப்பு நிலையங்கள்….. பதற்றத்தில் எரிபொருள் நிரப்ப குவியும் மக்கள்!!

எரிபொருள் விலை நேற்று (31/05/2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும்

அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதுடன் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.

அத்துடன்,

95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

மேலும்,

சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

இதேவேளை,

மண்ணெண்ணை விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.

இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் (Industrial Kerosene) ஒரு லீற்றர் 60 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி,

இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 270 ரூபாயாகும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு,

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை நேற்று (31/05/2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும்

அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் Industrial Kerosene நிலவுவதுடன் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது என பிரபல தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு,

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் QR முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடிரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் விலைக்குறைப்பும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும்,

விலைக்குறைப்பு எரிபொருட்களுக்கு ஏற்பட்ட போதிலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தவண்ணம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *