எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது!!
இன்று (15/05/2022) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வெசாக் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நிலை காணப்பட்டது.
அத்துடன்,
தற்போது ஹம்பாந்தோட்டையில் எரிபொருளை கோரி சில குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.