தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான பதிவுகள் முடிவடையும் வரை எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது….. எரிசக்தி அமைச்சர்!!
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான பதிவு முடியும் வரை இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறையின் கீழ் எரிபொருளை விநியோகிக்க தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு நேற்று(17/07/2022) அறிமுகப்படுத்தியிருந்தது.
இதன்படி,
தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன இலக்கம் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய QR CODE புதிய அனுமதிப்பத்திரத்தில் காணப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
இந்த நடைமுறையின் கீழ் பதிவை மேற்கொண்ட பின்னர்
சிபேட்கோ அல்லது லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் வாராந்தம் தேவையான எரிபொருள் கோட்டாவை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பல் நேற்று(17/07/2022) இரவு தீவை வந்தடைந்தது.
குறித்த கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்று,
மற்றுமொரு பெட்ரோல் கப்பல் இம்மாதம் 18 ஆம் திகதி அல்லது 19 ஆம் திகதி நாட்டை வந்தடையும் எனவும் அதற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும்,
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான பதிவுகள் முடிவடையும் வரை எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என அமைச்சர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.